முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக  சிவகங்கை நகராட்சி நிர்வாக மூலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்து தெரிவிக்கையில்,
        மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயலாற்றி வருகிறார்கள். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது. சிவகங்கையில் நகராட்சியில் அதேபோல் மனுக்கள் பெற்று தற்பொழுது நடவடிக்கையிலுள்ளது. விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகளான தெருவிளக்குகள் தேவையான அளவு அமைத்துக் கொடுத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளன. அதேபோல் நகர்ப்பகுதியில் தினந்தோறும் தூய்மையாக இருக்கும் வகையில் பணியாளர்கள் கண்காணித்து பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சாலைகளும் சீரமைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மக்களின் தேவைக்கேற்ப சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற்றுக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையர் அயுப்கான், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை தலைவர் ஆனந்தன், நகராட்சி நிர்வாக கண்காணிப்பு அலுவலர் அறிவழகன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் காஜாமைதீன், சசிக்குமார், ராஜா, சந்திரன், கோபி, கோட்டையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து