முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலையில் சின்ன சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் வேத பண்டிதர்கள் மந்திரங் களுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்தபடி வந்து கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் கோவிலில் அவரது எடைக்கு எடை அரிசி துலாபாரம் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலையில் சின்ன சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. மாடவீதிகளில் சாமி வீதி உலாவின் போது கலைக்குழுவினர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  பிரம்மோற்சவ விழாவை யொட்டி திருப்பதியில் மின் அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது. சாமி வீதி உலாவை பக்தர்கள் காண 19 இடங்களில் எல்.இ.டி. பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் குடிநீர், காபி, டீ, பால், மோர் உள்ளிட்டவை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர். 1500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து