முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் ரூ. 344 குறைந்த தங்கத்தின் விலை சவரன் ரூ. 28,360-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரே நாளில் ரூ.344 குறைந்து ஒரு சவரன் ரூ.28,360-க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ. 43 குறைந்து ரூ. 3,545க்கு விற்பனையானது.  இதன் மூலம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1800 ரூபாய் வரை குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் ஒரு சவரன் 29,616 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3702 ரூபாய்க்கும் நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் 800 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 47,400 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.47.40 காசுகளுக்கு விற்பனையானது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது. இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை நேற்று 28 ஆயிரத்து தாண்டி விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து