முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

காத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.

உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த சிகரம் கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர் உயரம் உள்ளதாக 1954-ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கீட்டின்படி அறிவிக்கப்பட்டது.  கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் எவரஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியுள்ளதாக தகவல் வெளியானது. எவரெஸ்ட் பயணத்திற்கு தயாராவதற்கு முன் நேபாளத்தின் கணக்கெடுப்புத் துறை 2017-ம் ஆண்டில் இதன் உயரைத்தை கணக்கிட சர்வேயர்கள் குழுவை நியமித்தது. இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 12-ம் தேதி நேபாள நாட்டிற்கு சென்றார்.

அந்நாட்டின் பிரதமர் கேபிஷர்மா ஒலி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாக ஒத்துழைப்பதற்கு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு கட்டமாக இமயமலையில் அமைந்துள்ள எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து