முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : பார்வையிழ்ந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் படித்து ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்குரிய பிரஞ்சால் பட்டில் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்றார்.

மகராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டதில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில். 6 வயதில் சூரியனை தொடர்ந்து உற்று நோக்கியதால் கண் பார்வையை இழந்த இவர், தன்னம்பிக்கையை இழக்காமல் பள்ளி கல்வியை படித்து முடித்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 2016-ம் ஆண்டில் 26 வயதான போது ஐ.ஏ.எஸ். எனப்படும் இந்திய ஆட்சி பணி தொடர்பான பட்டம் பெற விரும்பிய பிரஞ்சால் பட்டில், அதற்குரிய பாடங்களை வாசித்து காட்டும் மென்பொருளின் உதவியுடன் கற்று 2017-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்ற பிரஞ்சால் பட்டில், முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்று அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணியாற்றினார். இந்த நிலையில், எர்னாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் திருவனந்தபுரம் மாவட்ட துணை கலெக்டராக பிரஞ்சால் பட்டில் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து