முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய  மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்தன. அதாவது சமூக வலைதள கணக்குடன் அதனை உபயோகப்படுத்தும் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதால் அதனை தவிர்க்க அந்த கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆன்லைன், மற்றும் சைபர் குற்றங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டால் உடனே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும் எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் வேண்டுமென்றால் சென்னை ஐகோர்ட்டில் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதையடுத்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து