உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்களுடன் இந்தியா அடுத்த போரை எதிர்த்து வெல்லும்: பிபின் ராவத்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      இந்தியா
Bipin Rawat 2019 09 23

புது டெல்லி : டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் 41-வது இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியா அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும்  ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும். எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நாம்  எதிர்கால போருக்கான அமைப்புகளைப் ஆய்வு செய்து வருகிறோம். சைபர், ஸ்பேஸ், லேசர், எலக்ட்ரானிக் மற்றும் ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சியை நாம் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து