முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்.

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும்,  ஒகியோ மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் சுவாரஷ்யமாக சென்ற நிலையில் போட்டியின் 10-வது ரவுண்டில் இருவரும் மோதிக் கொண்ட போது திடீரென பேட்ரிக் மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பேட்ரிக்கை பரிசோதனை செய்ததில் அவர் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேட்ரிக் நான்கு நாட்களாக கோமாவில் இருந்த நிலையில் பேட்ரிக் டே நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 27 ஆகும்.

இது தொடர்பாக ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல் அளித்த பேட்டியில்; போட்டியை நான் போட்டியாக மட்டுமே பார்க்கிறேன். அவரை வெற்றி கொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந்ததே தவிர அவரை காயப்படுத்துவதோ, தாக்குவதோ என் நோக்கமாக இருக்கவில்லை. குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து இத்துடன் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் உலக அளவில் குத்துச்சண்டை போட்டி மைதானத்திற்குள், 3 குத்துச்சண்டை வீரர்கள் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து