எதிரணிக்கு அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய கேப்டன்: கோலி சாதனை

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      விளையாட்டு
kohli record 2019 10 21

ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுத்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பாமல் தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதன் மூலம் 8-வது முறையாக எதிரணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனால் அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். முகமது அசாருதீன் 7 முறையும், டோனி 5 முறையும், கங்குலி நான்கு முறையும் பாலோ-ஆன் கொடுத்துள்ளனர். 1993-94-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு முறை (லக்னோ மற்றும் பெங்களூரு) பாலோ-ஆன் கொடுத்தது. அதன்பின் தற்போதுதான் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8-வது முறையாக பாலோ-ஆன் கொடுத்த நிலையில், 7 முறை வெற்றியும், இரண்டு முறை டிராவும் கண்டுள்ளது. பாலே-ஆன் கொடுக்காமல் இந்தியா பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து