முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வர்த்தகத்தை சீரமைப்பது மத்திய,மாநில அரசுகள் கடமை: ச.ம.க தலைவர் சரத்குமார் பேட்டி:

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் தனது சொந்த செலவில் கர்மவீரர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வி.டி.மணி நகரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், காமராஜர் மணிமண்டபத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம்.வருகிற 10-ம் தேதி நடைபெறுகிற எங்களது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் போட்டியிட விரும்புகிறவர்கள்,அவர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்து பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்படும்.டிஜிட்டல் இந்தியாவில் காய்கறி உள்ளிட்ட எல்லா பொருட்களுமே வீட்டிற்கு வந்து விடுகிறது.எனலே சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஆன்-லைன் வர்த்தகத்தை சீரமைப்பது மத்திய மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.நடிகர்கள் நடிக்காமலே ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் அதற்கேற்ப அரசின் பாலிசிகள் மாற்றப்படவேண்டும்.முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா இல்லையா என்பது எனக்கு தெரியாது.ஆனால் அந்த நிலம் பஞ்சமி நிலம் தான் என்று முன்பு வைகோ சென்னார்.தற்போது இல்லை என்கிறார்.என்ன காரணமென்று தெரியவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மணிமண்டபத்திலுள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு ச.ம.க தலைவர் ஆர்.சரத்குமார் கட்சி நிர்வாகிகள் புடைசூழச் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது ச.ம.க மாநில மற்றும் மதுரை,விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து