ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      விளையாட்டு
Sports-3

Source: provided

மும்பை : இதில் பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் (64 சதவீதம்) வைத்திருந்த கோவா அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. பிற்பாதியில் மும்பை வீரர்கள் சர்தாக் (49-வது நிமிடம்), சக்ரவர்த்தி (55-வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் கோவா வீரர்கள் ஹூகோ பவுமாஸ் (59-வது நிமிடம்), கார்லஸ் பெனா (89-வது நிமிடம்) கோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்தது. 4-வது லீக்கில் ஆடிய கோவா அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஐ.எஸ்.எல். வரலாற்றில் மும்பை சிட்டி அணிக்கு எதிராக மட்டும் கோவா அணி இதுவரை 26 கோல்கள் திணித்துள்ளது. இதன் மூலம் ஐ.எஸ்.எல். போட்டியில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த அணி சாதனையை கோவா படைத்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து