முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கணை சிங்கி யாதவ் தகுதி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

தோஹா : டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சிங்கி யாதவ் தகுதி பெற்றுள்ளார்.

14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சிங்கி யாதவ் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் சிங்கி யாதவ் 588 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்தார்.தாய்லாந்தின் நாபஸ்வான் யாங்பைபூன் 590 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் 21 வயதான சிங்கி யாதவ், அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறும் 11-வது இந்தியர் சிங்கி யாதவ் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து