முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      சிவகங்கை
Image Unavailable

  சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி பேசுகையில்,
            இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த திட்டங்களில் ஒன்றான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை ஏழை மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து அவர்கள் வழியில் ஆட்சிபுரியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் திட்டங்களை தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள். மடிக்கணினி என்பது கல்வி பயிலுவதற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இது கல்வியின் வளர்ச்சிக்கு மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்த வேண்டும்.
           மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மாணவப்பருவம் என்பது அரியத்தக்க பருவமாகும். இக்காலக்கட்டத்தில் கவனம் சிதருதல் ஏற்பட வாய்ப்புள்ள ஒன்று. அவ்வாறு கவனம் சிதற ஏற்படாத வண்ணம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியரிடம் நன்மதிப்பை பெற்றிட வேண்டும். பெற்றோர்களின் சொல்லை மதிக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் அனைவரும் சிறந்து விளங்கலாம். படிப்பில் பட்டம் பெற்று அரசுத் தேர்வுகளுக்கு மடிக்கணினி மிகப்பயனுள்ளதாக இருந்து வருகிறது. நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுமட்டுமன்றி கல்லூரியின் வளர்ச்சிக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்க அரசு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாகப் படித்து சிறந்த சான்றோர்களாக வரவேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன்   தெரிவித்தார்.
            இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன், சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார், கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை துணைத்தலைவர் மெய்யப்பன், காரைக்குடி வட்டாட்சியர் திரு.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து