முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பிடித்த டூட்டி சந்த்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் சிறந்த சாதனையாளர்களுக்கான டைம் பத்திரிகையின் 100 பேர் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

டைம் பத்திரிகையின் 100 பேர் பட்டியலில் வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், சுகாதாரம், அறிவியல், செயல்பாடுகள் போன்றவற்றில்  எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 பெரிய  நட்சத்திரங்களின் பெயர்கள்  இடம்பெற்று உள்ளன.  இதில்  இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்  பெயரும் இடம் பெற்று உள்ளது. இது குறித்து டூட்டி சந்த் கூறியதாவது:-

இந்த அங்கீகாரத்தை டைம் பத்திரிகையிலிருந்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின சமத்துவத்தை நான் நம்புகிறேன். விளையாட்டு மற்றும் பெரிய சமூகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.  தன்னுடைய சாதனை மற்றும் சோதனை காலங்களில் தன்னுடன் இருந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் தன்னுடைய ஆலோசகர் அச்சுயுதா சமந்தாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை டூட்டி சந்த் பெற்றுள்ளார். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாப்போலியில் நடந்த யுனிவர்சியேடில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 1980-ல் பங்கேற்ற பி.டி. உஷாவிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கடந்த 2016-ல் டூட்டி சந்த் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமைக்கு காரணமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து