முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் கூறப்படுவதாவது,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் உள்ளது சாகஸ் உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 16 வயதான மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளன்று சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மாணவர்கள் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய மாணவர் தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் உயிரிழப்பு குறித்து போலீஸார் தரப்பில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவர் நதானியேல். அவர் மாணவர்களுடன் இயல்பாகவே பழகினார். அவர் தனிமை விரும்பி இல்லை. அவர் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்றார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறக்க, மாணவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இறக்கும் போது மாணவரது தாயார் உடனிருந்தார் என்று தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்ந்து ஆழமான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து