முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களை மீட்க மத்திய அரசு உதவி: நிர்மலா சீதாராமன் உறுதி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை மீட்க மத்திய அரசு உதவிகள் செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்  நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்திருப்பதாகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த இழப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வருவாய் பங்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில், வோடபோன்  ஐடியா நிறுவனம் 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க தவறினால் அந்நிறுவனம் திவால் ஆகும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த ஒரு நிறுவனமும் மூடப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்றார். அந்த அணுகுமுறையுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனும் பேசி வருவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து