முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானும் காஷ்மீரைச் சேர்ந்தவள்தான் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர் சாட்சியம்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : நானும் காஷ்மீரைச் சேர்ந்தவள் தான் என்றும் தீவிரவாதத்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பே எனது குடும்பம் பாதிக்கப்பட்டது என்றும் அமெரிக்க மனித உரிமை ஆணையம் முன்பு இந்திய அமெரிக்கரும் பிரபல பத்திரிகையாளருமான சுனந்தா வசிஷ்ட் சாட்சியம் அளித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய டாம் லான் டோஸ் மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில், நாடு கடந்து வசிக்கும் காஷ்மீர் மக்கள் சங்கத் தின் (கே.ஓ.ஏ) தலைவர் ஷகுன் முன்ஷி மற்றும் செயலாளர் அம்ரிதா கவுர் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவரும் அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல பத்திரிகையாளருமான சுனந்தா வசிஷ்ட் சாட்சியம் அளித்தார். அப்போது, 1990-களில் காஷ்மீரில் இந்துக்கள் எதிர்கொண்ட பிரச் சினைகள் குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:

என்னுடைய தந்தையும் தாயும் நானும் காஷ்மீர் இந்துக்கள். காஷ்மீரில் நாங்கள் வசித்த வீட்டையும் எங்கள் வாழ்வையும் தீவிரவாதம் அழித்து விட்டது. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து வெளியேறினோம். என்னுடைய மனித உரிமையும் ஒரு நாள் மீட்கப்படும் என நம்பினேன். நானும் காஷ்மீரின் சிறுபான்மை இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவள் தான்.

காஷ்மீரில் பிற மதத்தவர்கள் இருப்பதை தீவிரவாதிகள் விரும்பவில்லை. காஷ்மீர் மக்கள் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதையும் அங்கு இயல்புநிலை திரும்புவதையும் தீவிரவாதிகள் விரும்பவில்லை. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்ததால்தான் இது வரை மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வந்தன. அதை ரத்து செய்திருப்பதால் மனித உரிமை மீட்கப்படும். மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதால், இந்தியாவின் பிறபகுதி குடிமகன்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டம், உலகிலேயே மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் அமெரிக்க அரசிய லமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ் ரத்து செய்யப்பட்டதை ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வரவேற்கின்றனர்.காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி. காஷ்மீர் இல்லை என்றால் இந்தியா இல்லை. தீவிரவாதத்துக்கு எதிராக போரா டும் இந்தியாவுக்கு சர்வதேச நாடு கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன்மூலம் மனித உரிமை மீறல் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து