முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகருக்கு அருகே 19 வயது பெண் ஒருவர் 1996-ல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ரோட்னி ரீட். இவருக்கு வரும் 20-ம் தேதி விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டெக்சாஸ் கோர்ட்டு அதிரடியாக அதை நிறுத்தி வைத்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் அடுத்த மாதம் 12-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 3,322 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அதிவேக இலவச பிராட்பேண்ட் இணையதள சேவை வழங்கப்போவதாக எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அறிவித்துள்ளது. சிரியா உள்நாட்டுப்போரில் அப்பாவி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிற 7 வான்தாக்குதல்கள் குறித்து ஐ.நா. கமிஷன் விசாரணை நடத்த உள்ளது. பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இருந்து ஏவப்பட்ட 2 ராக்கெட்டுகளை தடுத்து நிறுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. சிலியில் உள்ள சாண்டியாகோ நகரில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் பிளசண்ட்வில்லே என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த கால்பந்து ஆட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து