முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வி - இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த  நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் விடுதலைப் புலிகளுடன் போர் நடந்தபோது ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால், இலங்கைக்கு மிகவும் பாதுகாப்பனவராக கருதப்பட்டார். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (யு.என்.பி) சார்பில் சஜீத் பிரேமதாசா (52) போட்டியிட்டார். இவர் இலங்கையில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ரணசிங்கே பிரேமதாசாவின் மகன் ஆவார். தேசிய மக்கள் சக்தி(என்.பி.பி) கட்சியின் அனுரா குமார திசநாயகேவும் 3-வது முக்கிய வேட்பாளர் ஆவார்.

 அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதற்காக, அந்நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு அதிகாரிளும், 60 ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு படையினர் 8 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஐரோப்பிய யூனியன் தேர்தல் பார்வையாளர்களும் அதிபர் தேர்தலை கண்காணித்தனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்தாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இலங்கையில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடந்தது. பல இடங்களில் மழை பெய்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன்  நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ச 69,24,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 55,64,233 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து