முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா விலகிய பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த கூட்டத்தொடர் பெரும் சவாலாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரம், பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் தற்கொலை என பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வதற்கு அரசு தரப்பும் தயாராக உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்ததற்காக கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும், இ-சிகரெட்டை தடை செய்து கொண்டு வந்த அவசர சட்டத்துக்கும் முறையான சட்ட மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை (திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வம் கொண்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை பாராளுமன்ற மக்களவை கூடியதும் தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா, ஜெகநாத் மிஷ்ரா, சுக்தேவ் சிங் லிப்ரா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களின் பணிகளை நினைவுகூர்ந்து உறுப்பினர்கள் உரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
அவரை உடனடியாக விடுதலை செய்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த விவாகரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘பரூக் அப்துல்லாவை காவலில் அடைத்து 108 நாட்கள் ஆகின்றன. பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டும். இது அவரது அடிப்படை ஜனநாயக உரிமை. அரசு இந்த உரிமைக்கு தடை விதிக்க முடியாது’ என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர், சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று முழக்கமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி அவர்கள் செல்ல முயன்றதால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பும் அமளியும் ஏற்பட்டது.

இதற்கிடையில், பரூக் அப்துல்லாவை விடுதலை செய்வது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திரினாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து