முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாச்சின் மலைப்பகுதி பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கரக்கோரம் பகுதியில் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ராணுவப் பகுதியாகும். மிக அதிகமான குளிர்காற்றில் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர்காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் மைனஸ் 60 டிகிரியாக உறைநிலை இருக்கும். குளிர்காலத்தில் இங்கு அடிக்கடி நிலச்சரிவும் பனிச்சரிவும் ஏற்படுவது இயற்கை. ஆனால், இதில் சில நேரங்களில் ராணுவ வீரர்கள் சிக்கி விடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், உதவியாளர்கள் ஏறக்குறைய 8 பேர் இந்த பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து உடனடியாக பனிப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடும் திறன் பெற்ற மீட்புப் படையினர் வந்து பனிச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்டனர். இதில் பனிச்சரிவில் சிக்கிய 8 பேரும் படுகாயமடைந்திருந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அதில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் மலைப்பகுதி இருக்கிறது. அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் 6 ராணுவ வீரர்கள், இரு உதவியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் மூச்சுத்திணறல் காரணமாக 4 வீரர்கள், 2 உதவியாளர்கள் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து