முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருப்பமனு கட்டணம் அதிகமாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் தயக்கம்!! தேதியை நீட்டிப்பு செய்து அன்பழகன் அறிவிப்பு!!

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- விருப்ப மனுவிற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து எதிர்பார்த்த அளவிற்கு விருப்பமனுக்கள் விற்பனையாகாததால் வரும் 27-ம் தேதி வரை விருப்பமனு விநியோகத்தை நீட்டிப்பு செய்து தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.இதையடுத்து அ.தி.மு.க சார்பில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.அதே போல் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் என தி.மு.க மேலிடம் அறிவித்திருந்தது.இந்நிலையில் இரண்டு நாட்கள் மட்டுமே அ.தி.மு.க சார்பில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு மீண்டும் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் நிர்வாகிகளால் பெறப்பட்டது.இருப்பினும் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் விருப்பமனுக்காக வசூலிக்கப்பட்டு முறையாக ரசீதுகளும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட விருப்பமனுக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களின் கட்டணம் அ.தி.மு.க.வை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சியாக தி.மு.க மாறியதால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.இதனை கருத்தில் கொள்ளாத தி.மு.க மேலிடம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்பமனுக்கள் என்ற பெயரில் அடாதடி வசூல் செய்து வருகிறது.இதனால் தி.மு.க மேலிடம் விநியோகிக்கும் விருப்ப மனுக்கள் தற்போது கட்சியினரிடம் வெறுப்பு மனுக்களாக மாறி வருகிறது.தி.மு.க.வில் பணம் உள்ளவர்களால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில் சாமானிய தொண்டர்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இதனிடையே அதிகளவு கட்டணம்,பொருளாதாரத்தில் நலிவு போன்ற காரணங்களால் தி.மு.க மேலிடம் எதிர்பார்த் அளவிற்கு விருப்பமனுக்கள் விநியோகம் இல்லாமல் போய்விட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க மேலிடம் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து விருப்பமனுக்கள் போனியாகாததற்காக செம டோஸ் விட்டதுடன் காரண காரியங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டது.எனினும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மீண்டும் ஒரு இலக்கினை நிர்ணயித்த தி.மு.க மேலிடம் விருப்பமனுக்கள் விநியோகத்திற்கான தேதியை வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.அதனடிப்;படையில் தான் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் இது தொடர்பான அறிவிப்பினை நேற்று வெளியிட்டுள்ளார்.எது எப்படியோ தி.மு.க மேலிடத்தின் தொடர் நெருக்குதல்கள் காரணமாக விருப்பமனுவானது அக்கட்சியினர் மத்தியில் வெறுப்பு மனுவாக மாறியிப்பதே நிஜம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து