முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணிகளுக்கு நிதி உதவி - ஜெகன் மோகன் அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : ஹஜ் பயணிகளுக்கு அவர்களின் பயண செலவு தவிர பிற செலவுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.  

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் பயண செலவை தவிர்த்து பிற செலவுகளுக்காக நிதி உதவி வழங்குவதற்கு என ஆந்திர அரசு நிதி அரசாணையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களில் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக உள்ளவர்களுக்கு ரூ. 30,000 வழங்கப்படும் என்றும் 3 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 60,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஆந்திர பிரதேச ஹஜ் கமிட்டிக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹஜ் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து