முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திராவில் காவல் நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் பணிக்கு ரோபோ

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : நாட்டிலேயே முதல் முறையாக பொதுமக்களின் புகார்களை பதிவு செய்யும் ரோபோ காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் சைபீரா எனும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாராணிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள இந்த ரோபோவில் 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையில் 13 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோவின் ஏற்கனவே பழைய குற்றவாளிகள் குறித்து பதிவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் பழைய குற்றவாளிகளை கண்டால் கட்டுப்பாட்டு அறைக்கு சைபீரா செய்திகளை அனுப்பும் திறன் கொண்டது. அதில் இணைக்கப்பட்டுள்ள கணினி திரையில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலமும் அல்லது குரல் பதிவின் மூலமும் புகார்களை பதிவு செய்யலாம். இந்த ரோபோ புகாரை பதிவு செய்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார்தாரர் மற்றும் விசாரணை அதிகாரியிடம் ஒப்புதல் அளிக்கும். ஒவ்வொரு புகாருக்கும் தீர்வு காண அதிகபட்சமாக மூன்று நாட்கள் காலக்கெடு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை உயரதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்யும் இந்த ரோபோவை, ரோபோ கப்லர் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதே சமயம் இந்த ரோபோவை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைக்கப்பட்டால் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என ஆந்திர காவல்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து