முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் விமானத்தில் அவதிப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய சீன டாக்டருக்கு குவியும் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

குவாங்சோ,  நீண்ட தூர விமானத்தில் பயணித்த நோயாளியின் உயிரைக் காப்பாற்ற சீன டாக்டர் செய்த செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து நியூயார்க்கிற்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் முதிய பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த டாக்டர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாவ் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த டாக்டர்கள் விமானத்தில் கிடைத்த ஆக்ஸிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினர்.

ஆனால் நோயாளியை உயரத்தில் வைத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறும் என்ற நிலை இருந்தது. சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில் யாரும் எதிர்பார்க்காத அந்த செயலை செய்தார் ஜாங்ஹாங். நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றத் தொடங்கினார். சுமார் 800 மில்லி சிறுநீரை வெளியேற்றினார் அந்த டாக்டர்.கிட்டத்தட்ட 37 நிமிடங்கள் நீண்ட இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். டாக்டரின் இந்த துரித செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இரண்டு டாக்டர்களும் தாங்கள் வேலைபார்க்கும்  தென் சீனாவில் உள்ள ஹைக்கோவில் உள்ள ஹைனன் மருத்துவமனையால்  கவுரவிக்கப்பட்டனர், மேலும் ஒரு மருத்துவருக்கு  இந்திய மதிப்பில் ரூ.13.92 லட்ச ரூபாய் ( 100,000 யுவான்) வழங்கப்படும் என்று அவரது மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் தலைவர் சூ ஆண்டிங் கூறுகையில், ஜாங்கின் அர்ப்பணிப்பு மனப்பான்மை குறித்து மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது, மேலும், ஜாங் ஒரு சர்வதேச மருத்துவ மன்றத்திற்காக நியூயார்க் சென்றுள்ளதால்  அடுத்த வாரம் திரும்பி வருவார், அவர் திரும்பிய பிறகு மருத்துவமனை அவருக்கு விருதை வழங்கும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து