முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சுற்றுலாவுக்காக சியாச்சின் பகுதியை திறக்க பாக். மறுப்பு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால் இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக வழிதர முடியாது என்று பாகிஸ்தான் நேற்று தெரிவித்துள்ளது.

சியாச்சின் தரைப்பகுதி முகாமில் இருந்து குமார் போஸ்ட் வரை சுற்றுலா நோக்கங்களுக்காக முழு பகுதியையும் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான இச்செய்திக்கு பதிலளிக்கும் விதமாக சியாச்சினில் இந்தியா சுற்றுலாப்பகுதியாக அறிவிப்பதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் ஊடகத்தினரிடம் கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய பகுதியாக சியாச்சின் உள்ளது. ஆனால் இங்கு இந்தியா சுற்றுலாவைத் தொடங்கப்போவதாகக் கூறுகிறது. இந்தியா சியாச்சின் பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது. சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவில் இருந்து நல்ல அல்லது சாதகமான எதுவும் நடக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. அப்படியிருக்க, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான பிரச்சினையில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியாவுக்காக எப்படி சுற்றுலா செல்ல வழிவிடமுடியும்?குரு நானக் தேவின் 550 -வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த மாதம் திறக்கப்பட்ட கர்தார்பூருக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இந்தியா தடைகளை ஏற்படுத்தி வருகிறது. சீக்கிய குருத்வாராவை பார்வையிட 5,000 பேர் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைவான பக்தர்களே வந்தனர். இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து