மராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      அரசியல்
Nitin Gadkari 2019 03 28

மராட்டியத்தில் அமைந்துள்ள காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்வர் பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.  இந்த நிலையில், மராட்டியத்தில் நிலவும் கூட்டணி சூழல் குறித்து  மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி என்பது இந்துத்வா சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது. இதில் அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை. அத்தகைய கூட்டணி மீறுவது நாட்டிற்கு மட்டுமல்ல, இந்துத்வா கொள்கைக்கும், மராட்டியத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். மராட்டியத்தில்  காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது, இந்த கூட்டணி ஆட்சி அமைத்தாலும் நீண்ட காலம் நீடிக்காது. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களால் நிலையான ஆட்சி வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து