முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என்று பாராளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில், பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியுடன், நுகர்வோர் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறையில் (எப்.எம்.சி.ஜி) அதிகரித்த பயன்பாட்டின் காரணமாக பிளாஸ்டிக்கின் தேவை கணிசமாகவும் அதிகரித்துள்ளது. இது மறைமுகமாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

பிளாஸ்டிக்கின் ஆயுள், வலிமை, மந்தமான நடத்தை, குறைந்த செலவு போன்ற காரணங்களால் பிளாஸ்டிக் தொழில் வேகமாக வளர தொடங்கியது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக், கழிவு மேலாண்மையில் பெரும் சவாலாக உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தரவுகளின்படி, நாடடில் உள்ள 60 முக்கிய நகரங்களில் ஒரு நாளைக்கு மட்டும் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 25,940 டன் கழிவுகள் உருவாகின்றன. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் 4,773 பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு நாளைக்கு 15,384 பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்கின்றன. இது, 25,940 டன் கழிவுகளில் 60 சதவீத அளவாகும். ஆனால், மீதமுள்ள 40 சதவீதம்,  அதாவது 10,556 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாத நிலையில் சுற்றுச்சூழலில் சிதறிக்கிடக்கிறது. இதனை ஒழிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீதான உரம் அல்லது மக்கும் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்குள் ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து