முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழருக்கு முக்கிய பதவி

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

அமெரிக்கன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் மற்றும் சைன்சஸ் அமைப்பின் உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த தமிழர் அனந்தா பி. சந்திர ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்தின் கேம்பிரிட்ஜ் நகரில் புகழ்பெற்ற மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்.ஐ.டி.) உள்ளது. இது அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் ஒரு உயர்ந்த பல்கலைக் கழகமாகும். இந்த பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருப்பவர் அனந்தா சந்திர ஹாசன். சென்னையில் பிறந்த அனந்தா சந்திர ஹாசன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அனந்தா சந்திர ஹாசன் அதிக ஆற்றல்களை கொண்ட எலக்ட்ரிக் சர்க்யூட்டுகளை தயாரித்து, அதை ஆராய்ச்சி செய்வதிலேயே முழு கவனமும் செலுத்தினார். அவரின் தொடக்ககால பணியாக சிறு கம்யூட்டர்களுக்கு குறைந்த சக்திகொண்ட சிப்புகளை உருவாக்கியது. இன்றைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர மொபைல் சாதனங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்வி அமைப்பான  அமெரிக்கன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் மற்றும் சைன்சஸில் அனந்தா பி.சந்திரஹாசன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து