முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ஆண்டுகளுக்குபின்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோத உள்ளதால், ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் கோலி, ரோஹித், புதிதாக இணைந்த மயங்க் அகர்வால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அதேபோல், விண்டீஸ் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பழைய அதிரடி பார்மிற்கே திரும்பியுள்ள வெஸ்ட் இண்டீஸை, சமபலத்துடன் உள்ள இந்திய அணி வெளுத்து வாங்குமா? என்பது இன்று தெரிந்துவிடும். இந்தியா-விண்டீஸ் அணிகள் கடைசியாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் மோதின. தற்போது 8 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் மீண்டும் இங்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராகுல் துவங்குவாரா?

உள்ளூர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், அதே உத்வேகத்துடன் விண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் வெளுத்து வாங்கி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவாண் காயத்தால் விலக, டி20 தொடரில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார், ராகுல். ஆனால், ஒருநாள் தொடரில் தவாணுக்கு மாற்றாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதால், ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புவிக்கு பதில் ஷர்தல்:

விண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் வீரியம் இன்றளவும் குறையாத காரணத்தால், ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக பந்துவீச்சாளர் ஷர்தல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேப்பாக்கத்தில் இந்தியா எப்படி?

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. விண்டீஸ் அணி இங்கு விளையாடிய 6 போட்டிகளில் 1-ல் தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.

மழை வாய்ப்பு?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதலே சென்னையில் பரவலாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்கவுள்ள சேப்பாக்கத்தில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், போட்டி நேரத்தில் மழை வர அதிகபட்ச வாய்ப்பு 24 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சற்று மனதை தேற்றிக்கொள்ளலாம்.

இந்தியா, விண்டீஸ் அணிகள் மொத்தம் 130 ஒருநாள் போட்டிகளில் மோதின. இரு அணிகளும் தலா 62 போட்டியில் வெற்றி பெற்று சமபலத்துடன் திகழ்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து