தேர்தல் பார்வையாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தமிழகம்
Tamil-Nadu-State-Election-Commission-2019 12 15

ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஊராட்சி உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பார்வையாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

அரியலூர் மாவட்டத்திற்கு டி.எஸ். ராஜசேகர், கோவை மாவட்டத்திற்கு ஜி.கோவிந்தராஜ், கடலூர் மாவட்டத்திற்கு சி.முனியநாதன், தர்மபுரி மாவட்டத்திற்கு  டி.பி.ராஜேஷ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு எம்.எஸ்.சண்முகம், ஈரோடு மாவட்டத்திற்கு எஸ். விவேகானந்தன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எஸ்.நாகராஜன், கரூர் மாவட்டத்திற்கு என். வெங்கடாசலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு டி. ஆப்ரஹாம், மதுரை மாவட்டத்திற்கு டாக்டர் என். சுப்பையன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வி.தட்சிணாமூர்த்தி, நாமக்கல் மாவட்டத்திற்கு டாக்டர் டி. ஜகந்நாதன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அமிர்த ஜோதி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதுல்ஆனந்த், சேலம் மாவட்டத்திற்கு சி. காமராஜ், சிவகங்கை மாவட்டத்திற்கு டாக்டர் எம்.கருணாகரன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு டாக்டர் எஸ். அனீஸ் சேகர், நீலகிரி மாவட்டத்திற்கு பி. ஜோதி நிர்மலாசாமி, தேனி மாவட்டத்திற்கு எம். ஆசியாமரியம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வி.சம்பத், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு எம்.லட்சுமி, திருப்பூர் மாவட்டத்திற்கு ஆர். கஜலட்சுமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஏ.ஞானசேகரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இ. சுந்தரவல்லி, திருவாரூர் செல்வி கவிதா ராமு, விருதுநகர் மாவட்டத்திற்கு வி. அமுதவல்லி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து