இத்தாலி கண்ணாடி அணிந்திருக்கும் ராகுலுக்கு தேசத்தின் வரலாறு தெரியாது : ஜார்கண்டில் அமித்ஷா பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      இந்தியா
amit shah 2019 08 04

இத்தலி கண்ணாடி அணிந்திருப்பவருக்குத் தேசத்தின் வரலாறு தெரியாது என்று பா.ஜ.க. தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்

ஜார்கண்ட் மாநிலம், பாகமாரா சட்டப்பேரவையில் உள்ள கிரிதி நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது,

நாங்கள் கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதாதான் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டி விடுகிறது. வடகிழக்கு மக்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், அரசியல் உரிமைகள் அனைத்தும் எந்தவிதத்திலும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படாது. அதைப் பாதுகாக்கவே செய்யும் என்று மோடி அரசு உறுதியளிக்கிறது. மேகாலயா மாநில முதல்வர் கான்ராட்சங்மா தன்னுடைய அமைச்சர்களுடன் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேகாலயாவில் பிரச்சினை இருக்கிறது என்றார்கள். இந்த சட்டத்தில் ஏதேனும் திருத்தம் செய்யுங்கள் என்று கோரினார்கள், ஆனால் சட்டத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இருக்கும் விடுமுறையின்போது இதுகுறித்து விரிவாக ஆலோசிப்போம் எனத் தெரிவித்தேன்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரைச்சலை ஏற்படுத்துகிறார், இந்தியாவின் வரலாறு தெரியாமல், அறியாமையால், இத்தாலி கண்ணாடி அணிந்து பார்க்கிறார். ஜார்கண்ட்டில் மாவட்ட இளைஞர் தலைவராக இருக்கும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கூட மேம்பாட்டுப் பணிகள் குறித்த கணக்கை அளிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகளாக என்ன செய்தது. இந்த மாநில இளைஞர்கள்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலி கண்ணாடி அணிந்திருக்கும் ராகுல் காந்திக்கு இந்த வரலாறு தெரியாது. காங்கிரஸ் கட்சி நக்சல் தீவிரவாதத்தையும் ஊக்குவித்து, காஷ்மீரை தீவிரவாதிகள் கைகளில் ஒப்படைத்திருந்தது, அயோத்தி விவகாரத்தை இத்தனை ஆண்டுகளாக நீட்டித்தது. முத்தலாக் தடைச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்ததால், எங்களை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து