முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என தி.மு.க. போட்ட அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த முறையீட்டை உச்சநீதிமன்றத்தில் வைத்த தி.மு.க.விற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தி.மு.க.வுக்கு தகுந்த பதிலடியை தந்துவிட்டார். அரசை பற்றி விமர்சிக்க தி.மு.க. தலைவருக்கு எந்தவித அருகதையும் இல்லை.

உச்சநீதிமன்றம் தேர்தலுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கூறிய பிறகும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் தேர்தலை நடத்தக் கூடாது என்று தி.மு.க.போடும் சதித்திட்டம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் தன் தகுதிக்கு ஏற்பவும் பதவிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். என்னைப் பற்றி விமர்சிக்கும் தகுதியும், தராதரமும் மு.க. ஸ்டாலினுக்கு கிடையாது. இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் ஆண்டு முழுவதும் பேசலாம். தனிப்பட்டமுறையில் என்னை பற்றி பேச அவர் ஒன்றும் காந்தி கிடையாது. தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்ள வேண்டும் என்றால் மேடை போட்டு பேச நான் தயார். நான் ஊர் பெயர் தெரியாதவன் எனக்கூறும் தி.மு.க. பத்திரிகை தான் மூன்றாம் தரமானது. நான் தமிழ் நாட்டின் குடிமகன்.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உங்களுக்கு நாவடக்கம் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து