முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி டிராபி : இமாசல பிரதேசத்தை 158 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

திண்டுக்கல் :  ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 2-வது சுற்றில் இமாசல பிரதேசம் அணியை முதல் இன்னிங்சில் 158 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு அணி.

ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாசல பிரதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இமாசல பிரதேசம் அணி முதலில் களமிறங்கியது. தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இமாசல் அணி வீரர்களை வெளியேற்றினர்.

இதனால், இமாசல பிரதேசம் அணி 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து இறங்கிய ஆகாஷ் வசிஷ்ட் மற்றும் மயங்க் தகார் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதனால் அந்த அணி 130 ரன்களை கடந்தது. இறுதியில் இமாசல பிரதேசம் அணி 71.4 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆகாஷ் வசிஷ்ட் 35 ரன்களும், மயங்க் தகார் 33 ரன்களும், சுமித் வர்மா 30 ரன்களும் எடுத்தனர்.தமிழ்நாடு சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, தமிழ்நாடு அணி களமிறங்கியது. முதல் நாள் முடிவில் தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து