முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35வது கலை விழா போட்டிகளின் நிறைவு விழா:

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2019      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி. புதுடெல்லி, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின்(Association of Indian Universities, New Delhi) பங்களிப்போடு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-வது கலைவிழா போட்டிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
  இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலுள்ள 36 பல்கலைக்கழகங்களிலிருந்து 1253 மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
  கலைவிழா போட்டிகளின் முடிவில் திருவனந்தபுரம், கேரளா பல்கலைக்கழகம், முதலிடத்தையும் (ழுஎநசயடட றinநெச), கோழிக்கோடு பல்கலைக்கழகம், கோழிக்கோடு இரண்டாம் இடத்தையும் (சுரnநெச)  பெற்றன.
  இதன் நிறைவு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது.  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் நிறைவு விழாவில் தலைமையுரையாற்றினார்.  அவர் தமது உரையில், இந்திய கலாச்சாரத்தில் கலைகளின் பங்கு ஒரு நாகரீகமான வாழ்க்கையின் அம்சமாக உள்ளது என்றார்.  இந்திய கலாச்சாரத்தில் கலைகளின் பங்கானது ஆன்மீகம் மற்றும் நல்லொழுக்க பண்புகளை வளர்ப்பதில் ஒரு கருவியாக திகழ்கிறது.  இந்த பெரிய கலாச்சார நிகழ்ச்சியை நடத்தியதின் மூலம் அழகப்பா பல்கலைக்கழகம் கல்வியோடு கலைகள் மற்றும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது தெளிவாகிறது என்றார்.
  இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் பார்வையாளர் பேரா.ரஞ்சன் காக்காட்டி தமது உரையில் இது போன்ற கலாச்சார விழாக்கள் நடத்துவதன் நோக்கம் இளைஞர்களிடையே பொதிந்துள்ள கலைத்திறமைகளை வெளிக் கொணர்ந்து நமது நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டி காப்பதே ஆகும் எனத் தெரிவித்தார்.  தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் கலாச்சார போட்டிகளை நடத்துவதற்கு அழகப்பா பல்கலைக்கழக வளாகம் தகுதியான ஒன்றாக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
  பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுபெற்ற கடம் விக்கு விநாயக்ராம் அவர்கள் இவ்விழாவில் நிறைவு விழா உரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில், மானாமதுரையின் மண்ணால் செய்யப்பட்ட கடத்தை ஐக்கிய நாடுகள் சபையில் தான் வாசித்த அனுபவத்தை நெகிழ்வோடு எடுத்துக் கூறினார்.  மேலும் செட்டிநாடு தான் ஆரம்ப காலம் தொட்டே இசைக் கலைஞர்களை ஆதரித்து வந்தது எனவும் குறிப்பிட்டார்.  முன்னதாக தனது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து