முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து 4 நாட்களாக உயர்த்தப்பட்ட தங்கத்தின் விலை நேற்று குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,288 உயர்ந்தது. அமெரிக்க, ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள்  பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தையிலும் ஆபரண தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ. 53 குறைந்து ரூ.3,843-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து