முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

கொழும்பு : நானும், எனது தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் என்று மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தர ரஜினி முடிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. அரசியல் நடவடிக்கைக்காக இலங்கை வரும் அவருக்கு விசா வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதை இலங்கை முன்னாள் அதிபரும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நானும், எனது தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம். எந்த ஒரு தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து