முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி அறிக்கை அபத்தமானது என்று சவுதி அரேபியா கூறி உள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தனிப்பட்ட கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்தியை அமேசான் நிறுவனர்  ஜெப் பெசோஸின்  தொலைபேசி  2018-ம் ஆண்டு மே 1-ம் தேதி  ஹேக் செய்யப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மான் பெசோஸின் தொலைபேசியில் ஊடுருவ ஒரு தீங்கிழைக்கும் வாட்ஸ்அப் வீடியோவை அனுப்பினார் என்று கார்டியன் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ அனுப்பிய பின்னர் பெசோஸின் தொலைபேசியில் சில மணி நேரங்களுக்குள் பெரிய அளவிலான தகவல்கள் வெளியேற்றப்பட்டது என்று செய்தி  மேலும் கூறுகிறது. பிப்ரவரி 2019-ல், லாரன் சான்செஸுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தியதால் செய்தித்தாளின் உரிமையாளர் தன்னை அச்சுறுத்துவதற்கு முயற்சித்ததாக பெசோஸ் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் கசிந்த உரை மற்றும் புகைப்படங்கள் இந்த ஹேக்கிங்கோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியின் தொலைபேசியை சவுதி அரசு அணுகியதாகவும், அவரது தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் 2019 மார்ச் மாதம் பெசோஸின் பாதுகாப்புத் தலைவர் கூறியிருந்தார்.ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக்கிங் செய்வதற்குப் பின்னால் சவுதி அரேபியா  இருப்பதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் அபத்தமானவை. இந்த கூற்றுக்கள் குறித்து விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது. , இதன்மூலம் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும்  என்று சவுதி அரேபியா தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

அமேசான் தலைமை நிர்வாகிக்கும் சவுதி அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே  நன்றாக இல்லை. பெசோஸின் சொந்தமான வாஷிங்டன் போஸ்டின் கட்டுரையாளர் மற்றும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டதில் இருந்து இது நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து