முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை, : தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 4, 5, 11 மற்றும்12 ஆகிய நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17,01,662 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், இதில் புதிதாக பெயர் சேர்க்க 13,16,921 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் இன்று முதல் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதியன்று,  வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து