முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பைதான் எங்களது லட்சியம்: ரவி சாஸ்திரி சொல்கிறார்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

எங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய நிலையில் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. இந்திய அணி டி20 உலக கோப்பை வர இருக்கும் நிலையில் இன்னும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் உலக கோப்பைக்கான அணியை தயார் படுத்துதலுக்கு உதவியாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,

நாங்கள் சீதோஷ்ண நிலை, எதிரணி யார்? என்று பார்ப்பதில்லை. உலகின் எந்த நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக கோப்பை எப்போதுமே எங்கள் மனதில் இருக்கும் ஒன்று. அதை வெல்வதுதான் லட்சியம். அதற்கான அனைத்தையும் செய்வோம். இந்திய அணி அகராதியில் நான் என்ற வார்த்தையே கிடையாது. நாங்கள் என்ற வார்த்தைதான் உண்டு. இதுதான் அணியின் நிலை. ஒருவருடைய சாதனையை மற்றவர் கொண்டாடுவார்கள். ஏனென்றால், அது ஒரு அணியால் கிடைத்த வெற்றியாகும்.ஒருநாள் தொடரை வென்ற இந்தியா டி20 தொடரையும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலியா தொடரை மனநிலை அளவில் வலிமை பெற்றுள்ளோம் என்பதையும், நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் நிரூபித்துள்ளது. வான்கடேயில் படுதோல்வி அடைந்த பிறகு, அதில் இருந்து மீண்ட விதம் பாராட்டுக்குரியது. இந்த அணி தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து வருகிறது. முன்னதாக எது இடந்தாலும் அது வரலாறு. முன்னதாக சிறப்பாக என்ன செய்தோமோ, அதை எதிர்காலத்தில் செய்ய விரும்புகிறோம். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதை நாங்கள் விரும்புகிறோம். ஷிகர் தவான் காயம் அடைந்தது கவலை அளிக்கிறது. மிகப்பெரிய கவலை. ஏனென்றால் தவான் சீனியர் வீரர். அவர் ஒரு மேட்ச் வின்னர் வீரர். இதுபோன்று வீரர் ஒருவர் காயம் அடையும்போது அணியின் ஒவ்வொருவரும் வருத்தம் அடைவார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து