முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அமித்ஷா கூட்டத்தில் கோஷம்: வாலிபர் தாக்கப்பட்டார்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

டெல்லியில் அமித்ஷா கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பிய வாலிபரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு பிரசார களம் சூடுபிடித்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாபர்புர் சட்டசபை தொகுதியில் நடந்த பா.ஜனதாவின் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். அவர் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பேசி கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோஷம் எழுப்பிய இளைஞரை பா.ஜனதா தொண்டர்கள் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர்.  இதை பார்த்த அமித்ஷா உடனே, அந்த இளைஞரை மீட்கும்படி தனது பாது காவலர்களிடம் கூறினார். இதையடுத்து கூட்டத்தினரிடம் இருந்து இளைஞரை மீட்டனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “அமித்ஷா கூட்டத்தில் கோஷம் எழுப்பிய இளைஞரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை.  பின்னர் அவர் தனது வீட்டு முகவரியை கொடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைக்கப்பட்டார்.  டெல்லியில் சங்கம் விஹார் பகுதியில் வசிக்கும் அந்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து