முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிப் பழக்கத்தை இந்தியா வளர்த்துள்ளது தொடர் நாயகன் கே.எல். ராகுல் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மவுங்கானு : வெற்றிப் பழக்கத்தை இந்தியா வளர்த்துள்ளது என்று ஐந்தாவது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.பேட்டிங் செய்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியா பீல்டிங் செய்யும் போது கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 224 ரன்கள் விளாசினார்.வெற்றிக்குப்பின் அவர் கூறுகையில்,

இந்தியா 5-0  என வெற்றி பெற்ற பின் நான் இங்கு நிற்பது சந்தோசம் அளிக்கிறது. நாங்கள் மிகவும் அற்புதமான வகையில் டி20 கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்து எங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினோம். வெற்றியை நழுவ விடாமல் கைப்பற்றியது நம்பிக்கையை வளர்த்துள்ளது.வெற்றிப் பழக்கத்தை நாங்கள் வளர்த்துள்ளோம் என்று நினைக்கிறேன். வெற்றிக்கான வித்தியாசமான வழிகளை கண்டுபிடிப்பது எங்களுடைய பொறுப்பாகும். டி20 உலக கோப்பை பற்றி நான் சிந்திக்கவில்லை. இதுபோன்ற சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து