முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் போட்டி தரவரிசைப்பட்டியல்: கே.எல்,ராகுல் - ரோகித் சர்மா முன்னேற்றம்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

துபாய் : 20 ஓவர் போட்டி தரவரிசைப்பட்டியலில் கே.எல் .ராகுல் 2-வது இடத்திற்கும், ரோகித் சர்மா 10 -வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது . குறிப்பாக, பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா, ஸ்ரதுல் தாகூரும் சிறப்பாக செயல்பட்டனர்.

தொடர் முடிவடைந்த நிலையில் இருபது ஓவர் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.அதில் கே.எல்.ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்திலேயே தொடர்கிறார்.

பேட்டிங்கை பொறுத்தவரை, தரவரிசைப்பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 13-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து