முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

U- 19 உலக கோப்பை அரைஇறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13 - வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கையை 90 ரன் வித்தியாசத்திலும், ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்னில் வீழ்த்தியது. இதேபோல் நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை இன்று  (4-ந்தேதி) எதிர் கொள்கிறது. 4 முறை சாம்பியனான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து