முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 14 பதக்கங்கள் - பிராச்சி தங்கர் சிறந்த வீராங்கனையாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

சுவீடன் : தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனைகள் 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களை வென்று குவித்தனர்.

சுவீடன் நாட்டில் உள்ள போரஸ் நகரில் தங்க மங்கை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 75 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்திய ஜூனியர் மகளிர் அணியினர் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது. அதே வேளையில் இளையோர் அணி ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஜூனியருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற அரியானாவின் பிராச்சி தங்கர், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார். 54 கிலோ எடைப்பிரிவில் எத்தோபி சானு வாங்ஜாம்,66 கிலோ எடைப் பிரிவில் லாஷு யாதவ், 80 கிலோ எடைப் பிரிவில் மஹி ராகவ் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.  இளையோர் பிரிவில் 54 கிலோ எடைப் பிரிவில் முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றார். அதே வேளையில் சான்யா நெகி (57 கிலோ), தீபிகா (64 கிலோ), முஸ்கான் (69 கிலோ), சாக்சி ஜஹ்தலே (75 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். ஜூனியர் பிரிவில் ஜான்ஹவி சூரி (46 கிலோ), ரூடி லால்மிங்முவானி (66 கிலோ), தனிஷ்கா பாட்டீல் (80 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், தியா நெகி (60 கிலோ) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்தத் தொடரில் சிறந்த அணிக்கான கோப்பையையும் இந்தியா வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து