தேசிய பளுதூக்குதல் போட்டியில் 203 கிலோ எடை தூக்கி மீராபாய் சானு தேசிய சாதனை

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      விளையாட்டு
Mirabai Sanu record 2020 02 05

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.

தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 25 வயதான மணிப்பூர் வீராங்கனை ‘ஸ்னாட்ச்’ முறையில் 88 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 201 கிலோ எடை தூக்கியதே தேசிய சாதனையாக இருந்தது. மீராபாய் சானு தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

அவர் 2017-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். 203 கிலோ எடை தூக்கியதன் மூலம் மீராபாய் சானு உலக தரவரிசையில் 4-வது இடத்தை பிடித்தார். வெற்றிக்கு பிறகு மீராபாய் சானு அளித்த பேட்டியில், ‘எங்களது திட்டத்தின் படி எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 206-207 கிலோ எடை தூக்க வேண்டும் என்பதே இலக்காகும். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 210 கிலோ எடையை தூக்க முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து