முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 200 உயர்ந்தது

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.31,184க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. ஜனவரி மாதம் முழுக்க விலையேற்றம் காணப்பட்ட நிலையில் இந்த மாதம் சற்று ஆறுதலாக விலை குறைந்தது.  இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ.3,898-க்கு விற்பனையானது. அதே போல், சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.49,900க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் சென்னயைில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து