முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த நசீம் ஷா

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காளதேசம் 233 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் 445 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

41-வது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 38 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் தைஜுல் இஸ்லாமையும் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மெஹ்முதுல்லாவை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஹாட்ரிக் உடன் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து