முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்பந்திலேயே பவுண்டரி: 5 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கிய சச்சின்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று 5 ஆண்டுகளுக்குப்பின் பேட்டுடன் களத்தில் இறங்கிய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.

சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய துளையை, வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றது. அந்த இடத்தை நிரப்ப என்னும் ஒருவரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் மீண்டும் கால்காப்பு, பேட்டுடன் களமிறங்கமாட்டாரா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர் காட்சிப் போட்டியில் களமிறங்கினால்கூட அவரின் பேட்டிங்கைக் காண அரங்கம் ரசிகர்களால் நிறைந்துவிடும். கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற சச்சின் மீண்டும் பேட்டை தொடமாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கினர். இந்நிலையில் ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நேற்று காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்குப் பயிற்சியாளராக சச்சின் பொறுப்பேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து