முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை: 5-வது இடத்திற்கு முன்னேறினார் பாபர் அசாம்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சனை மிரட்டும் வகையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் பாபர் அசாம்.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவர் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி போன்று விளையாடுகிறார் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். டி20-யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாம் வங்காளதேசம் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 800 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 814 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜோ ரூட் 764 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி, ஸ்மித்தை நெருங்க வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து